முதல் Moderna தடுப்பூசிகள் அடுத்த வாரம் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. வரவுள்ள 6,500 தொகுப்புகளில் சுமார் 13,000 தடுப்பூசிகள் போடமுடியும். அமெரிக்க மருந்து நிறுவனத்திடமிருந்து வந்த தடுப்பூசிக்கு ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் EMA) இன்று ஒப்புதல் அளித்தது.
Moderna தடுப்பூசிகள் எப்போது பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் De Jonge அடுத்த வார ஆரம்பத்தில் அறிவிப்பார். Moderna தடுப்பூசிகள் முதலில் முதியவர்கள், மருத்துவ மனைகளில் வசிப்பவர்கள் மற்றும் காப்பகங்களில் வாழும் மனநலம் குன்றியோர் ஆகியோருக்கு போடப்படும் . Moderna தடுப்பூசி நெதர்லாந்திற்கு பகுதிகளாக வழங்கப்படுகிறது.

ஆரம்ப புள்ளிவிவரங்களின்படி, ஜனவரி இறுதிக்குள் 19,000 டோஸ் வழங்கப்படும். பிப்ரவரியில் 190,000 டோஸும், மார்ச் மாதத்தில் 178,000 டோஸும் வரும். ஆக மொத்தம் 400,000 டோஸ் காலாண்டில் நெதர்லாந்திற்கு கிடைக்கும். இதன் மூலம் 200,000 பேருக்கு தடுப்பூசி போடலாம். அது நர்சிங் ஹோம் மற்றும் நிறுவனங்களில் உள்ளவர்களின் எண்ணிக்கையைப் போன்றது.