Hollandtamilan

நெதர்லாந்தின் இந்த வார முக்கிய செய்திகள் 23-05-2021

கொரோனா தாக்கம் காரணமாக கடும் நெருக்கடியில் இயங்கிவந்த  மருத்துவமனைகளில் தற்பொழுது சற்று அழுத்தம்  குறைந்து வருவதாக தெரிகிறது. எடுத்துக்காட்டாக, முழங்கால் சத்திரசிகிச்சைகளுக்கு மீண்டும் அதிகமான சிகிச்சை அறைகள்  இப்போது பயன்பாட்டில் உள்ளன என்று டச்சு சுகாதார பராமரிப்பு ஆணையம் (NZa) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், 62 சதவீதமாக இருந்த மருத்துவமனை பராமரிப்பு  இந்த வாரம் அந்த சதவீதம் 66 சதவீதமாக உயர்ந்துள்ளது. புற்றுநோய்க்கான சிகிச்சைகள் உட்பட, பராமரிப்பை வழங்க முடியாத நிலையில் இருந்த மருத்துவமனைகளின் விகிதம் 28 இல் இருந்து  26 ஆகக் குறைந்தது. இதில்  ஒன்பது மருத்துவமனைகளில் இந்த காலகட்டத்தில்  ஆறு வாரங்களுக்குள் வழங்கப்பட வேண்டிய சில பராமரிப்பை சரிவர  வழங்க முடியவில்லை. .

Schipholலில் இருந்து அடிக்கடி பறக்கும் easyjet, ஜூன் முதல் மீண்டும் அதிக விமானங்களை இயக்கவுள்ளது . 2019 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது இப்போது Easyjetவிமானம் 15 சதவீத திறனில் மட்டுமே உள்ளது என்று Easyjet நிர்வாகம்  தனது அரை ஆண்டு புள்ளிவிவரங்களை வழங்கியபோது கூறியது.  விமான நிறுவனம் பாரிய இழப்பை நிதி ஆண்டில் சந்தித்தது.அந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், ஐரோப்பாவிற்குள் பிரத்தியேகமாக பறக்கும் விமான நிறுவனம் கிட்டத்தட்ட 750 மில்லியன் யூரோக்கள் இழப்பை சந்தித்துள்ளது .  பயண தடை இல்லாத நாடுகளுக்கு பறக்க மீண்டும் அனுமதிக்கப்பட்டால், மக்கள் மீண்டும் விமானத்தில் பயணம் செய்ய விரும்புகிறார்கள் என்று ஈஸிஜெட் சமிக்ஞை செய்கிறது. “இங்கிலாந்தில் இருந்து மீண்டும் சில நாடுகளுக்கு பயணிக்க முடிந்தபோது, ​​மேலும்  105,000 ஆசனங்களை Easyjet இணைத்துள்ளது .

COVID-19 வரவால்  வேலையின்மை கடுமையாக உயர்ந்தது. வேலையற்றோரின் எண்ணிக்கை 2020 மார்ச்சில் 273,000 ஆக இருந்து 2020 ஆகஸ்டில் 426,000 ஆக உயர்ந்துள்ளது. அப்போதிருந்து, வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது, பிப்ரவரியில் இருந்து வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. விருந்தோம்பல் துறையில் உள்ள நிறுவனங்கள், மீண்டும் ஊழியர்களைத் தேடும் வேளையில் வேலையின்மை குறையும் .

பலர் வேலைதேடும் முயற்சியில் வெற்றிபெற்றதால் சமீபத்திய மாதங்களில் வேலையின்மை குறைந்துவிட்டது.   266,000 ஆக இருந்த வேலையின்மை கொடுப்பனவு  பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த மாதம் 16,000 குறைந்துள்ளது. தொழில்துறையின் அனைத்து கிளைகளிலும் கொடுப்பனவு பெறுபவர் களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது  தற்காலிக வேலைவாய்ப்புத் துறை (-8.6 சதவீதம்) மற்றும் விருந்தோம்பல்  துறையில் (-8.0 சதவீதம்)…COVID-19 தொற்றுநோய் பரவியதால்  இரு துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் இது ஆச்சரியமல்ல