Hollandtamilan

நிறுவனங்கள் மற்றும் மாணவர்களுக்கான இணையவழி துரிதசேவை ஒன்றை Zuyd உயர்நிலைப்பள்ளி ஏற்பாடு செய்கிறது.

கொரோனா வைரஸ் காரணமாக பலர் வீட்டிலிருந்து வேலை செய்வதும் இணையவழியில் படிப்பதும் வழக்கமாக கொண்டுள்ளார்கள் . இது நிறுவனங்களுக்கும் மாணவர்களுக்கும் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வை  கடினமாக்குகிறது.

எடுத்துக்காட்டாக பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி பணிகள், பணிக் கல்வி(stages) மற்றும் தற்காலிக பணிகள் போன்ற செயல்களுக்கு நிறுவனங்களும் மாணவர்களும் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதை எளிதாக்குவதற்காக, Zuyd  உயர்நிலைப்பள்ளி  மே 25 முதல் 29 வரை இணையவழி  துரிதசேவை நிகழ்வை ஏற்பாடு செய்கிறது.  Zuyd  உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒரு கிழமைவரை ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் 11 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், தலா 15 நிமிடங்கள்  இணையவழி  துரிதசேவையை பயன்படுத்தலாம்

www.careerservices.zuyd.nl என்ற இணையதளத்தில் நிறுவனங்கள் எந்தவகையான  மாணவர்களைத் தேடுகிறார்கள் என்பதைக் குறிக்கின்றனர். Yacht, Fagro மற்றும்  Volta Limburg. உட்பட 40 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளன. மே 12 முதல், மாணவர்கள் www.careerservices.zuyd.nl வழியாக வழங்கப்படும் அமர்வுகளுக்கு பதிவு செய்யலாம். பின்னர் அவர்கள்  ஒரு இணைப்பைப் பெறுவார்கள், அதனுடன் அமர்வுக்கான அணுகல் ஏற்பாடு செய்யப்படுகிறது. மாணவர்கள்  விரும்பும் பல அமர்வுகளை ஏற்பாடு செய்யலாம்.