திருட்டு சந்தேகத்தின் பேரில் செவ்வாய்க்கிழமை காலை Heerlen னைசேர்ந்த 22 வயது இளைஞன் மற்றும் 23 வயது maastricht ஐ இளைஞன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதிகாலை 3.50 மணியளவில் maastricht இல் உள்ள Leuvenlaan னில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து திருட்டு சந்தேக நபர்கள் ஒரு மகிலூந்திலும் பேரூந்திலும் தப்பி செல்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது .
காவல்துறையினர் உடனடியாக காரில் தப்பித்து ஓடிய heerlen ஐ சேர்ந்த 22 வயது ஓட்டுனரை கைது செய்தனர்.பேரூந்தில் தப்பி ஓடிய மற்றொரு திருட்டு நபரை காவல்துறையின் மற்றொரு ரோந்து ரோந்துப் படையால் துரத்தப்பட்டது. 23 வயதான ஓட்டுனர் போக்குவரத்து சமிக்கை நிறுத்தங்களில் பேரூந்தை நிறுத்தாமல் அதிவேகமாக ஒட்டினர் .
Oxfordlaan பல்கலைகழக போக்குவரத்துசமிக்கை நிறுத்தத்தில் காவல்துறை வாகனம் திருட்டு சந்தேக நபர் ஒட்டிசென்ற பேரூந்தை இடைமறித்து நிறுத்தினார்கள் .,பேரூந்து ஓட்டுநரை யும் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
காவல்துறை வாகனம் மற்றும் பேரூந்து இரண்டையும் இழுத்துச் செல்ல வேண்டியிருந்தது. இந்த வாகன துரத்தலில் யாரும் காயமடையவில்லை. விசாரணையில் அன்றிரவு brunssum ல் பேரூந்து திருடப்பட்டது தெரியவந்தது. இரண்டு சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைக்காக காவல்நிலையத்தில் சிறையில் அடைக்க பட்டனர் ..