Hollandtamilan

டிசம்பர் 31, 2022 முதல் குளிர்பான தகர பேணிகளுக்கு முன்வைப்பு பணம் செலுத்தவேண்டும்.

தகர பேணிகளுக்கு முன்  வைப்பு 31 டிசம்பர் 2022 அன்று அறிமுகப்படுத்தப்படும் என மாநில செயலாளர் Stientje van Veldhoven கீழ் சபைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுச்சூழலில் தகர பேணிகளின்  எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்  ஒரு ஆரம்ப முடிவை எடுக்கிறார். பிரதிநிதிகள் சபையின் விருப்பத்திற்கு இணங்க, தகர பேணிகளின் முன்வைப்பு பணம்  2022 ஆம் ஆண்டின் இறுதியில் நடைமுறைக்கு வரும். ஒரு தகர பேணிக்கு  15 காசுகள் வைப்புத்தொகை வசூலிக்கப்படும், இது சிறிய நெகிழி புட்டிகளுக்கும்  பொருந்தும் .

சுற்று  சூழலில் ஆண்டுதோறும் சுமார் 2 பில்லியன் தகர பேணிகளைசேகரித்து மறுசுழற்சி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் .  van Veldhoven கூறுகையில் கொரோனா நெருக்கடி இந்த அமைச்சரவையில்  மிக உயர்ந்த முன்னுரிமையைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், மற்ற பகுதிகளில் ஆரோக்கியமான மற்றும் தூய்மையான எதிர்காலத்திற்காக நான் தொடர்ந்து பணியாற்றுவேன். ஒவ்வொரு ஆண்டும் தகர பேணிகளால்  விலங்குகளும் தங்களைத் தாங்களே காயப்படுத்துகின்றன.