Hollandtamilan

கோழி பண்ணை முதலாளிகள் இனி தங்கள் கோழிகளை கூட்டிற்குள் அடைத்து வைத்திருக்க வேண்டியதில்லை.

பிப்ரவரி 12 முதல் நடைமுறைக்கு வந்த சட்டங்களுக்கு நெதர்லாந்து விவசாயத்துறை அமைச்சர் (Carola Schouten) முற்றுப்புள்ளி வைக்கிறார். பறவைக் காய்ச்சல் ஜெர்மனியில் இருந்து பரவியது என்று தெரியவந்தது.

பிரதிநிதிகள் சபைக்கு விவசாய அமைச்சர் எழுதிய கடிதத்தில் நெதர்லாந்தில் பறவைக்காய்ச்சல் குறைந்து வருவதாகவும் ,குளிர்காலத்தில் நெதர்லாந்தில் குடிபுகுந்த நீர்பறவைகள்  வெளியேறிவருவதாகவும் எழுதியிருந்தார் .

ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களை விட குறைவான காட்டு நீர்பறவைகள் உள்ளன . நெதர்லாந்தில் குடியேறும் நீர்பறவைகள் பெரும்பாலும் நச்சுயிரை பரப்புகின்றன .

இப்பொழுது வறட்சியுடன் கூடிய வெப்பம் நிலவுவதால் பறவைக்காய்ச்சல் நச்சுயிர் உயிர்வாழும் தன்மை குறைந்துவருவதாக அமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.