கொரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கைகளின் விளைவாக பல மாணவர்கள் இரண்டு மாதங்களாக வருமானம் இல்லாமல் உள்ளனர். மாதத்திற்கு சராசரியாக 530 யூரோக்கள் வாடகை மற்றும் மளிகைப் பொருட்களுக்கு தேவைப்படும் என்று FNV தொழிலாளர் சங்கத்தின் இளைஞர் அணி மற்றும் தேசிய மாணவர் ஒன்றியம் (LSVB) ஆகியன இன்று புதன்கிழமை அறிக்கை அளித்தன.
வருமான இழப்பின் விளைவாக நிதி ரீதியாக அல்லல்படும் மாணவர்களுக்கு ஒரு தீர்வை உருவாக்க தொழிற்சங்கங்கள் விரும்புகின்றன. உழைக்கும் மாணவர்களின் பிரதிநிதிகளின் கூற்றுப்படி, அமைச்சரவையில் அவர்களது முறையீடு பல்வேறு அரசியல் கட்சிகளால் ஆதரிக்கப்படுகிறது.
பூஜ்ஜிய நேர ஒப்பந்தத்தைக் கொண்டுள்ள (nulurencontract)வேலைவாய்ப்பு முகவர் (uitzendbureaus )மூலம் வேலை செய்கிற மாணவர்கள் இரண்டு மாதங்களாக வருமானம் இல்லாமல் உள்ளனர் என்று FNV கூறுகிறது .