Roermond இல் De Brink ஆரம்பள்ளி திங்கட்கிழமை மூடப்படும் என்று பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் தகவல் அனுப்பியுள்ளது . வெள்ளிக்கிழமை பள்ளியின் ஊழியர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது . ஊழியருக்கு கொரோனா ஆரம்ப தொற்று இருப்பதாகவும், அடுத்த இரண்டு வாரங்களுக்கு வீட்டிலேயே இருப்பதாகவும் தெரிகிறது .
பள்ளியின் மற்ற ஊழியர்களும் தொற்று உள்ளதா என்று GGD விசாரித்துள்ளது, ஆனால் முடிவுகள் இன்னும் அறியப்படாததால், முன்னெச்சரிக்கையாக திங்களன்று பள்ளியை மூடி வைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது . ஆரம்ப பள்ளி DE Brink கொரோனா பாதிப்புக்குள்ளான இரண்டாவது பள்ளி. யாகும் .
Eygelshoven னில் உள்ள ஆரம்ப பள்ளியான De Veldhof இல் ஏற்கனவே நான்கு நோய்த்தொற்றுகள் இருந்தன. அந்த பள்ளியை மூடி வைக்கவும் எண்ணிம கல்விக்கு மாறவும் GGD முடிவு செய்தது.