Hollandtamilan

கடும் புயலால் ரயில்களுக்கும் சாலை போக்குவரத்தும் தடைப்பட்டது

பலத்த காற்று காரணமாக, Rotterdam மற்றும் Roosendaal இடையேயான ரயில் சேவையின்  ஒரு பகுதியை NS ரத்து செய்தது.அத்துடன்  பலத்த காற்று வீதியிலும் போக்குவரத்து சிக்கல்களை ஏற்படுத்தியது . Rotterdam Central மற்றும் Breda இடையே வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி வரை அதிவேக ரயில்கள் HSL இருக்காது.


Dordrecht மற்றும் Roosendaal இடையேயான பாதையில் குறைவான Stop Train கள் ஓடும்   கிளைகள் அடித்துச் செல்லப்படுவதால் சாலையில் ஆபத்தான சூழ்நிலைகள் ஏற்படலாம்,என  Rijkswaterstaat, உம் ANWB யும் எச்சரிக்கை செய்கின்றனர் . மேலும் aanhanger அல்லது vrachtwagenஓட்டுவது கடினம் என்று ANWB கூறுகிறது. வியாழக்கிழமை, KNMI முழு நாட்டிற்கும் கடலோர மாகாணங்களில் பலத்த காற்று மற்றும் கடற்கரையில் புயல் காற்றுடன் 8 அல்லது 9  Beaufort சக்தியுடன் Orange குறியீட்டை வெளியிட்டது. கடலோரப் பகுதிகளில், மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும், உள்நாட்டில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் KNMI தெரிவித்தது .