Zandvoort உல்லாச கடல்கரைக்கு தொடர்வண்டியில் செல்லவேண்டாம் என NS கூறியுள்ளது .நேற்று காலை Zandvoort செல்லும் தொடர்வண்டி மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சில பிரயாணிகளை இறக்கிவிட்ட பின்னர் வண்டி புறப்பட்டது .
கூட்டத்தை சீராக்க, Amsterdam CS நடை மேடையில் நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டு வரையறுக்கப்பட்ட பயணிகள் அனுமதிக்கப்பட்டனர் .மீதமுள்ளவர்கள் நிறுத்தப்பட்டனர் . சென்ற வாரத்தை விட இந்த வாரம் Zandvoort டில் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது . போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் கூட்டத்தை கண்காணிக்கிறார்கள் அத்துடன் வலைப்படக்கருவி (Webcam) உதவியுடன் 1.5 மீட்டர் இடைவெளி கண்காணிக்கப்படுகிறது .