பெல்ஜிய சிகையலங்கார நிலையங்கள் மீண்டும் திறப்பு எல்லைதாண்டி முடி வெட்ட சென்றால் 250€ அபராதம்.
சென்ற வார இறுதியில் இருந்து, பெல்ஜியத்தில் சிகையலங்காரக் கடைகள் திறக்கப்படுவதாலும், Carnaval விடுமுறை தொடங்கியதாலும் பெல்ஜிய மத்திய காவல்துறை கூடுதல் எல்லை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. தகுந்த காரணமின்றி அல்லது முன் அறிவிப்பு இல்லாமல் எல்லை தாண்டி Belgium செல்லும் ஒரு நபருக்கு 250 யூரோ அபராதம் விதிக்கப்படும்.
கொரோனா நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஏப்ரல் 1 வரை பெல்ஜியத்திற்கு அத்தியாவசியமற்ற பயணங்களை பெல்ஜிய அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஜனவரி 27 புதன்கிழமை முதல் நீங்கள் பூர்த்திசெய்யப்பட்ட EER படிவத்தை எல்லையில் சமர்ப்பித்துவிட்டு எல்லையை கடக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா நோக்கங்களுக்காக பெல்ஜியத்திற்கு வருவதில்லை என்றும் உறுதியளிக்க வேண்டும்.
மற்றும் உங்கள் பயணத்திற்கான காரணத்தையும் நீங்கள் குறிப்பிட வேண்டும். வேலை,குடும்பம் பெற்றோர்,கணவன் அல்லது மனைவி ,திருமணங்கள் மற்றும் இறுதி சடங்குகள்,மருத்துவ காரணங்கள்,பாதிக்கப்படக்கூடிய மக்கள் மற்றும் விலங்குகளுக்கு உதவி,படிப்பு,நீங்கள் ஒரு எல்லை குடியிருப்பாளராக இருந்தால், பெல்ஜியத்தில் அனுமதிக்கப்பட்ட உங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக செயல்பாடுகளைச் செய்வதற்கு , நீங்கள் பெல்ஜியம் செல்ல அனுமதிக்கபடுவீர்கள் .