ஊரடங்கு உத்தரவு காலத்தில் இடம்பெற்ற கலவரத்தில் குறைந்தது 1 மில்லியன் யூரோ மதிப்புள்ள சொத்துக்கள் சேதமாகியுள்ளன. டச்சு காப்பீட்டாளர்கள் சங்கம் அதன் உறுப்பினர்கள் இதுவரை பெற்றுள்ள சேத அறிக்கைகளின் அடிப்படையில் இதை மதிப்பிடுகிறது. சேத மதிப்பீடு முற்றிலும் காப்பீடு செய்யப்பட்ட வியாபார நிறுவனங்களுக்கு மட்டும் பொருந்தும்.
அத்துடன் தொழில்முனைவோருக்கான மொத்த சேதம் அதிகமாக உள்ளது. ஏனென்றால் பாதிக்கப்பட்ட அனைத்து தொழில்முனைவோரும் இந்த வகை சேதங்களுக்கு எதிராக காப்பீடு செய்யப்படவில்லை. தொழில் முனைவோர் தங்கள் காப்பீட்டாளரிடமிருந்து திரும்ப பெறமுடியாத நஷ்டஈட்டு தொகையை ஈடுசெய்ய அரசாங்கம் செவ்வாய்க்கிழமை ஒரு கவுண்டரைத் திறந்துள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வந்த பின்னர் Eindhoven, Den Bosch, Rotterdam மற்றும் Amsterdam போன்ற நகரங்களில் கடுமையான கலவரங்கள் ஏற்பட்டன.கலவரத்தை பயன்படுத்தி கலகக்காரர்கள் கடைகளை சூறையாடினார்கள். காப்பீட்டாளர்களுக்கு வந்த பெரும்பாலான முறையீடுகளில் கண்ணாடி சேதம் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட கடை சொத்துகள் ஆகியவை அடங்கும்.