மின்சார மகிழூந்து மற்றும் விரைவு மின்னளவி உபயோகிக்கும் குடும்பங்கள் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான யூரோக்களை சேமிக்க முடியும். தேசிய இணைய வழங்கியான (Tennet) டென்நெட் மில்லியன் கணக்கான ஐரோப்பிய தனியார் நபர்கள் மின்சார சந்தையில் செயலில் ஈடுபடக்கூடிய ஒரு தளத்தை உருவாக்கியுள்ளது. இது இன்று முதல் நெதர்லாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும், மேலும் பல நாடுகள் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் நபர்களிடையே மின்சார மகிழூந்து மற்றும் சூரியப்பலகம் பாவனையில் இருப்பது ஐரோப்பாவில் மில்லியன் கணக்கான கூடுதல் ஆற்றல் வர்த்தகர்களை உருவாக்குகிறது. உபரி இருக்கும்போது அவர்கள் மகிழூந்து மின்கலத்தை மறு மின்னூட்டம் செய்யலாம் . பற்றாக்குறை இருந்தால் மறு ஊட்டம் செய்யலாம் .
உங்கள் மின்சார மகிழுந்து மூலம் விரைவில் பணம் சம்பாதிக்கலாம்.
