Hollandtamilan

உக்கிரேன் ஏதிலிகழுக்காக நான்காயிரம் இடங்களை ஒதுக்கிய நெதர்லாந்து தொழில்அதிபர்

உக்கிரேன் ஏதிலிகழுக்காக நான்காயிரம் இடங்களை ஒதுக்கி தரமுன்வந்த தொழிலதிபரை அது தொடர்புடைய அதிகாரிகள் இன்னும் அணுகவில்லை.ஒல்லாந்தில் ஏதிலிகளை உள்ளே எடுப்பதில் அரசும் மக்களும் ஆர்வத்தோடு உள்ளனர் அதற்க்காக அரசு பலவழிகளில் பல்வேறு பகுதிகளில் தங்குமிடங்களை அமைத்து வருகிறது அதுபோன்று மக்களும் தம்மாலான உதவிகளை செய்து வருகின்றனர்
எதிரிகளை ஏற்றுக்கொள்வதில் எவரும் இதுவரை தமது எதிர் கருத்தினை முன்வைக்கவில்லை அனைவரும் ஒத்த கருத்துடன் இன்முகம் கொண்டு வரவேற்பது சிறப்பாக உள்ளது .


இருப்பினும் Brabant தை சேர்ந்த ஒரு தொழிலதிபர் தான் 4000 இருப்பிடங்களை வழங்க முன்வந்துள்ளார் ஆனாலும் அது தொடர்புடைய எவரும் அவரை அணுகவில்லை என்று அறியப்படுகிறது.
தொழிலதிபரின் சுற்றுலா தங்குமிடங்கள் பல வேலைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டது மற்றும் லிம்பேர்க் மாகாணத்தில் சுற்றுலா தங்கு விடுதிகள் திறந்த ஒரு வாரத்திலே தகுந்த ஆவணங்கள் இல்லாததால் மூடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

சட்ட நடவடிக்கைகளில் சிக்காமல் இருக்கவே தொடர்புடைய தொழிலதிபரின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவில்லை என்று அறியப்படுகிறது.
தற்போதோ உக்கிறேனில் இருந்து ஏதிலிகள் ஒல்லாந்துக்குள் வந்தவண்ணம் உள்ளனர் அவர்கள் தற்போது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலே தங்கி உள்ளனர்
அவர்களின் தகவலின் அடிப்படையிலே தமது திட்டங்களை மென்மேலும் மேம்படுத்தலாம் என்பதற்க்காக அடுத்த வாரத்தில் இருந்து உரிய முறையில் பதிவுசெய்யப்பட வேண்டும் என்று அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.