Hollandtamilan

இன்று 15-01-2021 ஊழல் குற்றச்சாட்டு காரணமாக நெதர்லாந்து பிரதமர் Mark Rutte தனது அமைச்சர்களுடன் ராஜினாமா

இன்று 15-01-2021 ஊழல் குற்றச்சாட்டு காரணமாக நெதர்லாந்து பிரதமர் Mark Rutte தனது அமைச்சரவையின் ராஜினாமாவை மன்னர் வில்லெம்-அலெக்சாண்டருக்கு வழங்கியுள்ளார். இவரது அரசின்  கூட்டணி அரசாங்கம் மூன்றாவது அமைச்சரவை நாடாளுமன்ற தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த முடிவை எடுத்துள்ளது . பொருளாதார அமைச்சர் Wiebes ஐ தவிர்த்து அனைத்து அமைச்சர்களும் பதவி விலகுகின்றனர் .

குழந்தைகள் பராமரிப்பு செலவுகளுக்கான அரச கொடுப்பனவை தவறாகப் பெற்றுக் கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டில் ஆயிரக் கணக்கான பெற்றோருக்கு பெருந்தொகை அபராதம் விதிக்கப் பட்டது. ஆனால் அது வரித்துறை அரச அதிகாரிகளின் தவறு என்று தெரிய வந்துள்ளது .

ஒரு மாதத்திற்கு முன்பு, பாராளுமன்ற விசாரணைக் குழு இது குறித்து ஒரு  அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில்  பெற்றோருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளமை , மேலும் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகள் மீறப்பட்டுள்ளமை சுட்டிக்காட்ட பட்டிருந்தது.