இன்று ஞாயிறு காலை 10 மணி வரை நெதர்லாந்தில் ரயில்கள் ஓடாது என புரோ ரெயிலின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். மோசமான வானிலை காரணமாக நாடு முழுவதும் பல தடைகள் உள்ளதால் எந்த ரயில்களையும் இயக்க முடியாது ஒரு சூழ்நிலை உருவாகிஉள்ளது.
காலை 10:00 மணிக்குப் பிறகு ரயில் போக்குவரத்தை தொடங்க முடியுமா என்று ரயில்வே மேலாளர் ஆய்வு செய்வார். என்று செய்தித் தொடர்பாளர் கூறினார். NS பயண அட்டவணையை சரிபார்த்த பின் பயணத்தை தொடங்கும்படி பயணிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை மாலை முதல் நிறைய பனிப்பொழிவு இருந்ததால் சுவிட்சுகள் மற்றும் உள்கட்டமைப்புக்கு பல இடையூறுகள் இருப்பதால் ரயில் போக்குவரத்து தொடங்கப்படாது என்று NS அறிவுத்துள்ளது . இப்போது நாட்டின் பெரும்பகுதி மீது பனி அடுக்கு மூடி உள்ளது.