இணைய வர்த்தகம் மூலம் மோசடி செய்ததாக Elst ஐ சேர்ந்த 26 வயது இளைஞரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைது செய்தனர். மொத்தம் 18,000 யூரோக்களுக்கு பொருட்களை வழங்குவதாக குறைந்தது முப்பது பேரை அவர் மோசடி செய்துள்ளார். சந்தேக நபர் 84,000 யூரோக்களுக்கு மேல் மோசடி செய்திருக்கக்கூடும் என்று காவல்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர். கொரோனா நெருக்கடியின் தொடக்கத்தில் Mask மற்றும் Handgel போன்ற பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிய வலைத்தளத்தின் மூலம் காவல்துறையினர் அந்த நபரைக் கண்டுபிடித்தனர்.
அத்தகைய பொருட்கள் கொரோனா பொதுமுடக்க நேரத்தில் பெறுவது கடினம். நாங்கள் order செய்த பொருட்கள் எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை என நெதர்லாந்து மற்றும் வெளிநாடுகளில் இருந்து கிடைத்த முறையீட்டை காவல்துறையினர் ஆராய்ந்து அந்த இணைய திருடனை கண்டுபிடித்தனர் . சந்தேகத்தின் பேரில் காவல்துறை விசாரணைக் குழு முதலில் Arnhem மைச் சேர்ந்த ஒரு ஆணையும், Rheden னைச் சேர்ந்த ஒரு பெண்ணையும் கண்டுபிடித்தனர் . orderகளுக்கான பணம் அவர்களின் வங்கி கணக்குகளில் வரவு செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்ட . இரண்டு பேரும் மீண்டும் விடுவிக்கப்பட்துள்ளனர்.
முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் Elst டைச் சேர்ந்த நபரின் bitcoinwalletஐ காவல்துறையினர் கைப்பற்றினர் . bitcoin கணக்கில் சந்தேகத்திற்கிடமான பிற பணப்பரிமாற்றங்கள் குறித்து விசாரணை இன்னும் நடந்து வருகிறது. சந்தேகநபரின் இணைய வர்த்தக கடைகள் Offline செய்யப்பட்டுள்ளது . மேலும் அதிகமான மக்கள் இணைய வர்த்தக மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் நம்புகின்றனர் .