Hollandtamilan

இங்கிலாந்தில் மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் Friesland இல்

இங்கிலாந்தில் மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் முதன்முதலில் Friesland இல் கண்டறியப்பட்டது. வழமையான கொரோனா  சோதனை மூலம் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என்று GGD Fryslân வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

வைரஸ்  முதன்முதலில் பிரிட்டனில் அடையாளம் காணப்பட்டதால், “பிரிட்டிஷ் வைரஸ் ” என்று அழைக்கப்படுகிறது, இது கொரோனா வைரஸின் மற்ற மாதிரிகளை  விட வேகமாக தொற்றக்கூடியது . ஆனால் இது ஆபத்தான  நோய்க்கிருமியாகத் தெரியவில்லை. நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்தில்  உள்ள பிற தொற்றுநோய்களுடன் சாத்தியமான தொடர்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிய GGD அந்த நபர் குறித்த மூல மற்றும் தொடர்பு ஆராய்ச்சியை நடத்துகிறது.

வியாழக்கிழமை, சுகாதார அமைச்சர் Hugo De Jonge பிரதிநிதிகள் சபைக்கு எழுதிய கடிதத்தில், பிரிட்டிஷ் கொரோனா வைரஸ் மாறுபாடு நெதர்லாந்தில் பதினைந்து பேரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Rotterdam இல்  ஒன்பது தொற்றுக்கள்  ஒரு தொடக்கப் பள்ளியில் கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் வைரஸின் ஐந்து தொற்றுக்கள்  Amsterdam இல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Amsterdam UMC மருத்துவமனை தனது இணையதளத்தில்  நான்கு செவிலியர்களுக்கும் இந்த தொற்று உள்ளதாக  தெரிவித்துள்ளது. Nijmegenஇல் இங்கிலாந்திலிருந்து திரும்பிய ஒரு பயணியிடம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.