Hollandtamilan

ஆசிரியர்களுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் Heerlen Wegwijzer ஆரம்ப பள்ளி மூடப்பட்டது.

ஆசிரியர்களுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் Heerlen Wegwijzer ஆரம்ப பள்ளி மூடப்பட்டது.  ஏழு ஆசிரியர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் Heerlen னில் உள்ள ஆரம்ப பள்ளி Wegwijzer வாரம் முழுவதும் மூடப்பட்டுள்ளது.

ஏழு ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது .  கொரோனா சோதனைக்காக காத்திருக்க வேண்டியுள்ளதால் , காய்ச்சல் அறிகுறிகளைக் கொண்ட ஏழு ஆசிரியர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். அவர்களுக்கு உண்மையில் கொரோனா தொற்று இருக்கிறதா  என்பதை பரி சோதனையின் முடிவில் தான் தெரியவரும் . De Wegwijzer திங்கள் மாலை  பள்ளியை மூட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டது . Heerlen னின் Zeswegen னில் உள்ள பள்ளியில் 23 ஊழியர்கள் உள்ளனர்.

 

இந்த நடவடிக்கை குறித்து 218 மாணவர்களின் பெற்றோருக்கு திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது. பள்ளி  செய்தித் தொடர்பாளர் Hélène Bessems கூறுகையில், வாரத்தின் இறுதியில், அடுத்த திங்கட்கிழமை பாடங்களை மீண்டும் தொடங்க முடியுமா என்று ஆராயப்படும். முக்கியமான தொழில்களைக் கொண்ட பெற்றோரின் குழந்தைகளுக்கு பள்ளியில் குழந்தை பராமரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்ற பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும்.