கடந்த புதன்கிழமை அழகான வானிலை காரணமாக Amsterdamஇல் உள்ள Vondelpark மற்றும் Tilburgஇல் உள்ள Spoorpark ஆகிய இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த காரணத்தால்,,,,மக்களை வெளியேறும்படி காவல்துறையினர் எச்சரித்தனர்.
Maastrichtசிலும், அதிகளவு மக்கள் சூரிய ஒளியை உள்வாங்க நகரத்தின் பல இடங்களில் அதிக நெரிசலை ஏற்படுத்தினர். காவல்துறையினர் தலையிட்டு அவர்களை திரும்பி அனுப்ப வேண்டியிருந்தது. Amsterdam நகராட்சி தனது குடியிருப்பாளர்களை வீட்டிற்கு அருகில் உள்ள நல்ல வானிலை அனுபவிக்கும் படி அறிவுறுத்துகிறது. பூங்காவில் மக்கள் நிறைந்திருப்பதை CCTV காட்டுகிறது. ஆனால் போதுமான சமுக இடைவெளியை கடைபிடிப்பதில்லை.
