மே 19, செவ்வாய்க்கிழமை பிற்பகல், அரசர் Willem-Alexander Hoensbroek இல் உள்ள Adelante புனர்வாழ்வு மையத்திற்கு வருகை தந்தார். மார்ச் மாதத்தில் திறக்கப்பட்ட Adelante வில் சிறப்பு மருத்துவ மறுவாழ்வு பராமரிப்பு மற்றும் தீவிர சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளை பராமரிக்கிறார்கள் .
லிம்பர்க்கில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகள் இங்கு வருகிறார்கள். செவிலியர்கள், மருத்துவர்கள், பௌதிக மருத்துவர்கள் மற்றும் உளவியலாளர்கள் அடங்கிய குழு நோயாளிகளுக்கு அவர்களின் உடல் மற்றும் மன மீட்புக்கு உதவுகிறது.
கொரோனா நோயாளிகளுக்கான புனர்வாழ்வு பராமரிப்பு பற்றி தெரிந்துகொண்ட அரசர் பின்னர் பயிற்சியாளர்களிடமும், தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா துறையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு நோயாளியுடனும் பேசினார். இறுதியாக, அரசர் ஒரு முன்னாள் கொரோனா நோயாளியுடன் பேசினார்.