அமெரிக்க நிறுவனமான Amazon Heerlenனுக்கு அருகே industrieterrein Avantisஸில் ஒரு விநியோக மையத்தை உருவாக்கி வருகிறது. விநியோக மையதில் முற்றிலும் ஜெர்மன் சந்தைபடுத்தல் நடைபெறும், நெதர்லாந்து பணியாளர்கள் 170 பேர் வரை வேலையில் நியமிக்கப்படுகிறார்கள். நத்தார் காலத்தில் தற்காலிக தொழிலாளர்கள் மூலம் சுமார் 300 பேர் வரை பணியில் அமர்தபடுவார்கள். 9,000 சதுர மீட்டர் விநியோக மையத்தின் கட்டுமானப் பணிகள் இந்த வசந்தகாலத்தில் தொடங்கப்படும் .
. Heerlen Wethouder Martin de Beer கூறுகையில் Amazon விநியோக மையம் புதிய வேலைகளை உருவாக்குவதில் ஒரு முக்கியமான படியாகும் மற்றும் முழு ஐரோப்பியர்களுக்கும் பொருளாதார ரீதியாக முக்கியமானது” என்று கூறினார். Amazon ஊழியர்களுக்கு மேலதிகமாக, அனைத்து பொருட்களையும் தனது வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்ல நிறுவனத்திற்கு வெளி நிறுவனங்களிலிருந்து கூடுதலாக 350 ஓட்டுநர்கள் தேவைப்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும், 66,000 சதுர மீட்டர் தளத்திலிருந்து 300 வேன்கள் வரை வாடிக்கையாளர்களுக்கு ஓட்ட முடியும்.