Hollandtamilan

அஞ்சல் பெட்டிகளில் சீன வாய் முகமூடிகளால் (Venlo) மக்கள் அமைதியின்மை.

வென்லோவில்(Venlo) உள்ள மோலன்போசனில் (molen Bossen) வசிப்பவர்கள் இந்த வார இறுதியில் தங்களது அஞ்சல்  பெட்டியில் நெகிழிப் பைகளால் பொதிசெய்யப்பட்ட முகமூடிகள்  இருப்பதை கண்டனர்.

அவர்களில் சிலர் உடனடியாக காவல்துறைக்கு அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை செய்தனர் .காவல்துறையினரின் விசாரணையில் ..இது சீன கிறிஸ்தவ உணவக அறக்கட்டளையின் எவாஞ்சலிசம் உணவகத்தினர் ஒரு நல்ல நோக்குடன் செய்ததாக தெரியவந்தது .

நெதர்லாந்தில் RIVM கொள்கைப்படி  பொருந்தக்கூடிய நடவடிக்கைகளை மக்கள் நேர்த்தியாகக் கவனித்தால் முகமூடி அணிய வேண்டிய அவசியமில்லை. அதனால்தான் வீட்டில் மக்களுக்கு முகமூடிகள் வழங்குவதை நிறுத்துமாறு அறக்கட்டளைக்கு காவல்துறை கடுமையாக அறிவுறுத்தியது.