Tauhid பெர்லின் என்றும் அழைக்கப்படும் Jama’atu Berlin என்ற முஸ்லிம் குழுவை தடை செய்துள்ளதாக பெர்லின் செனட் அறிவித்துள்ளது.இதுகுறித்து பெர்லின் செனட் Twitterல் பதிவிட்டுள்ளதாவது, பெர்லின் மற்றும் Brandenburg பொலிஸ், Jama’atu Berlin குழுவைச் சேர்ந்தவர்கள் இவீடுளில் அதிகாலை சோதனைகளை மேற்கொண்டனர்.Reinickendorf, Moabit, Wedding மற்றும் Neukölln மாவட்டங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த சோதனைகளில் சிறப்பு நடவடிக்கை கமாண்டோக்கள் உட்பட 800 பொலிசார் பங்கேற்றனர். உடனடியாக எவரும் கைது செய்யப்படவில்லை.இந்த தொடர் சோதனைகளைத் தொடர்ந்து Jama’atu Berlin-ஐ தடை செய்துள்ளதாக பெர்லின் செனட் அறிவித்துள்ளது.
Jama’atu Berlin IS ஐ பாராட்டி புகழ்ந்து கௌரவப்படுத்துவதாகவும், முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்வதை ஆதரிப்பதாகவும், தீவிர யூத-விரோதவாதி என செனட் உள்துறை செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.இந்த குழுவில் சுமார் 20 உறுப்பினர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது, அவர்களில் சிலர் கடந்த காலங்களில் பெர்லினின் சில பகுதிகளில் துண்டு பிரசுரங்களை வழங்குவதன் மூலம் கவனத்தை ஈர்த்தனர்.