பிரான்சில் பயணி ஒருவர் முகக்கவசம் அணிய மறுத்ததால், பயணிகள் இரயில் பாதியிலே நிறுத்தப்பட்ட நிலையில், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.பிரான்சின் நீஸ் நகரில் இருந்து தலைநகர் பாரிசை நோக்கி பயணிகள் இரயில் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது அந்த இரயிலில், பயணி ஒருவர் முகக்கவசம் அணியாமல் பயணித்துள்ளார்.
பிரான்சை பொறுத்தவரை பொதுபோக்குவரத்துகளில் முகக்கவசம் கட்டாயம் என்பதால், அவரைக் கண்ட அதிகாரிகள் முகக்கவசம் அணியும் படி கூறியுள்ளனர்.ஆனால், அந்த நபரோ முகக்கவசம் அணிய மறுத்துள்ளார். இதையடுத்து இரயில், Drôme மாவட்டத்தில் இருக்கும் Valence இரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து அந்த பயணி அதிகாரிகளால் இறக்கபப்ட்டவுடன், இரயில் அங்கிருந்து புறப்பட்டு செல்ல, கீழே இறக்கிவிடப்பட்ட பயணியை பொலிசார் கைது செய்து, அவருக்கு 135 யூரோ அபராதமாக விதித்தனர்.இதனால் பொதுப்போக்குவரத்துகளில் பயணம் மேற்கொள்ளும் போது, பயணிகள் கண்டிப்பாக முக்கவசத்துடன் தான் செல்ல வேண்டும், இல்லையெனில் இது போன்ற அபராதம் கட்ட நேரிடும் என்பதால், பொது மக்கள் எச்சரிக்கையுடன், விழிப்புடன் இருக்க வேண்டும்.