ஜேர்மனியில் கொரோனா பரவல் அச்சத்தில் மீண்டும் டாய்லெட் பேப்பர்களை வாங்கி குவிக்கத் தொடங்கியுள்ளார்கள் மக்கள். மார்ச் மாதத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது ஜேர்மனியில் மக்கள் பொருட்களை வாங்கிக் குவித்ததுபோலவே இப்போதும் வாங்கிக் குவிக்கத் தொடங்கியுள்ளதால், பொருட்களின் தேவை அதிகரித்துள்ளதாக Aldi மற்றும் Edeka போன்ற பெரிய பல்பொருள் அங்காடிகள் தெரிவித்துள்ளன.
ஆகவே, ஜேர்மன் வேளாண்மைத்துறை அமைச்சரான Julia Klöckner, மக்கள் பொருட்களை வாங்கிக்குவிக்கவேண்டாம் என வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா பரவல் என்றதுமே மக்கள் உணவுப்பற்றாக்குறை குறித்து அஞ்ச ஆரம்பித்துவிடும் ஒரு நிலை ஏற்பட்டுவிட்ட நிலையில், அப்படி அஞ்சத் தேவையில்லை, உணவுக் கையிருப்பில் தட்டுப்பாடு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொருட்களை வாங்கிக் குவிப்பது அர்த்தமற்ற செயல் மட்டுமல்ல, ஒற்றுமையின்மையையும் அது வெளிப்படுத்துகிறது என்றார் அவர். அது மட்டுமின்றி, முடிவில் இந்த பொருட்களில் பல குப்பைத்தொட்டிகளைத்தான் சென்றடைகின்றன என்றும் கூறியுள்ளார் Klöckner