பிரான்ஸ் தலைநகரில் பேராசிரியர் இஸ்லாமிய அடிப்படைவாதி ஒருவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில், ஜனாதிபதி மேக்ரான் இஸ்லாமியவாதம் பிரான்சில் ஒருபோதும் அமைதியாக உறங்காது என்று கூறியுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர் பகுதியில் சமீபத்தில், பாடசாலை ஆசிரியர் Samuel Paty என்பவர் இஸ்லாமிய அடிப்படைவாதியால் கொடூரமாக கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தையடுத்து, நேற்று நாடு முழுவதும் ஏராளமான மக்கள் அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொண்டனர்.அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து நேற்று மாலை பாதுகாப்பு அமைச்சரவையில் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான கூறுகையில், இஸ்லாமியவாதம் பிரான்சில் ஒருபோதும் அமைதியாக உறங்காது, இஸ்லாமியவாதத்தால் எழும் அச்சம் மக்களிடம் இருந்து மாறும் என்று கூறியுள்ளார்.
மேலும், அமைச்சர்களிடம் இது தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்கும் படி கூறியதுடன், இந்த விஷயத்தில் அரசு போர் புரிய வேண்டும் என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன