Hollandtamilan

ஸ்பெயினில் மே.11 முதல் ஊரடங்கு தளர்வு.

ஸ்பெயினில் கொரோனா தொற்று குறைந்துள்ளதையடுத்து அங்கு மே.11 முதல் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக பிரதமர் பெட்ரோ தெரிவித்துள்ளார். கடந்த 50 நாட்களுக்கும் மேலாக கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட இருப்பதால் அந்நாட்டு மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

அந்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பலி எண்ணிக்கை குறைந்து வருவதால் ஊரடங்கு தளர்த்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 179 பேர் பலியாகி உள்ளனர். நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் ஊரடங்கினை தளர்த்த அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் பெட்ரோ பொதுமக்கள் சமூக விலகலை கடைப்பிடித்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும். தொற்று ஏற்பட்டால் மக்கள் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். ஹோட்டல்களில் வெளியில் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் உணவு வழங்கப்பட வேண்டும். பொது நிகழ்ச்சிகளில் 10 முதல் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம்.