ரஷ்யாவுக்கு ஜேர்மனியின் புதிய அதிபாராக பதவியேற்ற Olaf Scholz கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஜேர்மனியின் புதிய அதிபராக பதவியேற்ற பிறகு பாராளுமன்றத்தில் தனது முதல் உரையில், உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் ஒன்றுபட்டுள்ளதாக Olaf Scholz கூறினார்.
ரஷ்ய-உக்ரைன் எல்லையில் உள்ள பாதுகாப்பு நிலைமையை நாங்கள் மிகுந்த அக்கறையுடன் தொடரந்து கவனித்து வருகிறோம்.உக்ரைன் குறித்து விவாதிக்க மற்ற ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் கலந்து ஆலோசிக்க புதன் பிற்பகுதியில் பிரஸ்ஸல்ஸுக்குச் செல்ல இருப்பதாக Olaf Scholz கூறினார்.ஜேர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியதையே நானும் கூறுகிறேன்.
அத்துமீறி உக்ரைனை ஆக்கிரமித்தால் ரஷ்யா பெரிய விலை கொடுக்க நேரிடும்.இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளும் மற்ற நட்பு நாடுகளும் ஒருமித்த குரலில் ஒலிப்போம்.ரஷ்யாவை ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்குமாறு அழைப்பு விடுத்தா Olaf Scholz, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுடன் ஆக்கபூர்வமான உரையாடலுக்கு தயாராக இருப்பதாக மீண்டும் வலியுறுத்தினார்.