பிரான்ஸில் அதிகரித்து வரும் கொரானா இரண்டாவது அலை காரணமாக,கொரோனோ தொற்று நோயாளர்கள் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்துள்ளதுடன், மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.
இது குறித்து கருத்து தெரிவித்த பிரான்ஸ் பிரதமர்..பிரான்ஸ் வலிமையான கொரானா இரண்டாம் அலையினை எதிர்கொண்டுள்ள போதிலும், நாடு தழுவிய பொது முடக்கத்திற்கான சாத்தியங்கள் இல்லை என்றும்,விதிகளை மேலும் இறுக்கமாக்குவதன் மூலமும், கொரானா பரிசோதனைகளை துரிதகதியில் மேற்கொள்வதன் மூலமும் முடக்கத்தை தவிர்த்து கொள்ள வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.கடந்த சனிகிழமை அதிகூடிய தொற்றாக 26900 காணப்பட்டுள்ளதுடன்,பின்னர் அது சரிவடைந்த போதிலும்,கொரானா நோயாளிகள் எண்ணிக்கை 11.5% உயர்வடைந்துள்ளது.
வைத்தியசாலைகளில் புதிய கொரானா தொற்றாளர்களுக்கான இடங்கள் குறித்து பரிசிலித்து வருவதாகவும்,எதிர்வரும் நாட்களில் அதிகரித்து வரும் நிலையில் சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்று பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன