இன்று ஜூலை 15 ஆம் திகதி புதன்கிழமை முதல், கேளிக்கை பூங்காவான Disneyland Paris திறக்கப்படுகின்றது.
கிட்டத்தட்ட மூன்றரை மாதங்களின் பின்னர் இந்த Disneyland Paris திறக்கப்படுகின்றது. பலத்த முன் ஏற்பாடுகள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படுவதாக அதன் இயக்குனர் தெரிவித்துள்ளார். நாள் ஒன்றுக்கு சராசரியாக 50,0000 பேர் வரை அனுமதிக்கப்படும் இங்கு, தற்போது 25,000 பேருக்கு மாத்திரமே அனுமதி அளிக்கப்பட உள்ளதாகவும்,
Disneyland இன் அடையாளமான Mickey மற்றும் Pluto இனை கட்டியணைப்பதற்கும் முத்தமிடுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
11 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்க உருவாக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்றவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, மிக கட்டாயமாக முன்பதிவுகள்/ நுழைவுச் சிட்டைகள் இணையத்தளம் ஊடாக மாத்திரமே வழங்கப்படும். நேரடியான நுழைவுச் சிட்டைகள் விற்பனை திறக்கப்பட மாட்டாது.
உணவகத்தில் குறிப்பிட்ட அளவினர் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள். உணவுகளின் பெயர்கள் தாங்கி மெனு அட்டைகள் வைக்கப்பட மாட்டாது. உணவு பட்டியலை அறிந்துகொள்ள தொலைபேசியில் QR குறியீடு வசதியை பயன்படுத்தி நீங்கள் அறிந்துகொள்ளலாம்.