பெட்ரோல், டீசல் பயன்பாட்டையே மொத்தமாக நிறுத்திவிடும் நோக்கத்துடன் திட்டம் ஒன்றை நோக்கி முன்னேறுகிறது ஜேர்மனி.ஆம், பெட்ரோல் அல்லது டீசல் பயன்படுத்தாமல், ஹைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்தி ரயில் ஒன்றை இயக்கும் முயற்சியில் ஜேர்மனி இறங்கியுள்ளது.அத்துடன், பதினைந்தே நிமிடங்களில் ரயிலுக்கு எரிவாயு நிரப்பும் நிலையம் ஒன்றையும் 2024க்குள் அமைக்க ஜேர்மனி முடிவு செய்துள்ளது.
2050 வாக்கில், கார்பன் வெளியேற்றத்தை முற்றிலும் முடிவுக்கு கொண்டுவரும் வகையில், 1,500 டீசல் எஞ்சின்கள் ஹைட்ரஜன் எஞ்சின்களாக மாற்றப்பட உள்ளன.மணிக்கு 160 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் இந்த ரயில், ஆண்டொன்றிற்கு 330 டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை குறைக்கும்.இந்த ஹைட்ரஜன் எஞ்சின்கள், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனுக்கு இடையில் ஏற்படும் ஒரு வேதிவினையின் மூலம் செயல் படுகின்றன. இந்த வேதிவினையின்போது, மின்சாரமும், நீராவியும், தண்ணீரும் கிடைக்கும் என்பதால் காற்று மாசு ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.