Hollandtamilan

நிலைமை மோசமாகிறது! பிரான்ஸில் மேலும் 38 பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு: அரசு முக்கிய அறிவிப்பு.

பிரான்ஸில் ஒரு கடல்கடந்த பிரதேசம் உட்பட 54 பகுதிகள் தற்போது ஊரடங்கு உத்தரவின் கீழ் உள்ளன.கொரோனா பரவுவதைத் தடுக்க கடந்த வாரம் பாரிஸ் உட்பட ஒன்பது பெருநகரங்களில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது.தற்போது இந்த ஊரடங்கு உத்தரவை மேலும் 38 பகுதிகளுக்கு விரிவுப்படுத்தி பிரான்ஸ் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.


அதாவது  இந்த பகுதிகள் இரவு 9:00 மணி முதல் காலை 6:00 மணி வரையிலான ஊரடங்கு உத்தரவில் சேர்க்கப்பட்டன.பிரான்ஸ் தற்போது அதன் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு, அதவாது மொத்தம் உள்ள 67 மில்லயின் மக்கள் தொகையில் 46 மில்லயன் மக்களை ஊரடங்கு உத்தரவின் கீழ் வைத்துள்ளது.பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் நிலைமை மோசமாக உள்ளது என்று பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கூறினார்.

 

நம் நாட்டின் சுகாதார நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது, ஒரு வாரத்தில் வைரஸ் 40% அதிகரித்துள்ளது.ஒவ்வொரு 15 நாட்களுக்கும் வழக்குகள் இரட்டிப்பாகின்றன என காஸ்டெக்ஸ் மேலும் கூறினார்.மக்கள் முகக் கவசங்களை அணியவும், கைகளை கழுவவும், ஒரு மீட்டர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.இளைஞர்கள் உட்பட யாரும் கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என கருதக்கூடாது என பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கூறினார்