பிரான்ஸில் 18 வயது இளைஞன் ஒருவன் தாக்கியதில் ஆசியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஆசியருக்கு ஆதரவாக அந்நாட்டு அதிபர் தெரிவித்த கருத்திற்கு எதிராக இஸ்ரேலில் நூற்று கணக்கானவர்கள் பிரான்ஸ் தூதரக குடியிருப்புக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பிரான்ஸில் ஆசிரியர் ஒருவர் முகமது நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தினை மாணவர்களுக்குக் காட்டியதன் காரணமாக 18 வயது இளைஞன் ஆசிரியரைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார்.
இந்நிலையில் ஆசியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இளைஞன் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டதில் இளைஞனும் உயிரிழந்தார்.முன்னதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் இது போன்ற கேலிச்சித்திரத்தினை ஒருபோதும் கைவிடமாட்டோம் என்றும், இஸ்லாமியர்கள் பிரான்ஸ் நாட்டின் எதிர்காலமாக இருக்கமாட்டார்கள் என்றும் கூறியிருந்தார்.இந்நிலையில் அவருடைய கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேலினட ஜப்பா நகரத்தில் டெல் அவிவாவில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் முககவசத்துடன் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் குறிப்பிட்ட அளவில் தனி மனித இடைவெளியையும் கடைப்பிடித்தனர்.
நபிகள் நாயகம் இஸ்லாத்தின் புனிதமான நபர், அவர் குறித்து யார் அவதூறு பரப்பினாலும், நாங்கள் அதனை அனுமதிக்க மாட்டோம் என போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்