Hollandtamilan

தொடர்ந்து 5-வது முறையாக ஜேர்மனிக்கு முதலிடம்!

தேசிய பிராண்டுகள் பட்டியலில் ஜேர்மனி தொடர்ந்து 5-வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது.Nation Brand Index எனும் தேசிய பிராண்டுகள் தரவரிசைப் பட்டியலில், 60 நாடுகளில் ஜேர்மனி முதல் இடத்தை பிடித்துள்ளது.இந்த பட்டியலில் ஜேர்மனி ஒட்டுமொத்தமாக 7-வது முறையாகவும், தொடர்ச்சியாக 5-வது ஆண்டாகவும் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

ஜேர்மனி 2008, 2014, 2017, 2018, 2019, 2020, மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் NBI நாடுகளின் மிக உயர்ந்த தரவரிசையில் உள்ளது.கடந்த ஆண்டு 2-வது இடத்தில் இருந்த பிரித்தானியா, இந்த முறை 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.ஏனெனில் மூன்றாவது இடத்திலிருந்த கனடா 2-ஆம் இடத்திலும், நான்காவது இடத்தில் இருந்த ஜப்பான் 3-வைத்து இடத்திற்கும் முன்னேறியுள்ளன.தரவரிசையில், இத்தாலி 6-வது இடத்திலிருந்து 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது, மேலும் அமெரிக்கா 10-வது இடத்திலிருந்து 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பிரான்ஸ், ஸ்வீடன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஒரு இடம் பின்வாங்கியுள்ளன.