Hollandtamilan

தீவிரமாக பரவும் நோய்! 70,000 உயிர்களை பலிகொடுக்க தயராகும் ஜேர்மனி.

ஜேர்மனியில் உள்ள மற்றொரு கோழி பண்ணையில் பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, மேலும் 70,000 கோழிகளைக் கொல்ல திட்மிடப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கிழக்கு மாநிலமான Mecklenburg-Vorpommern-ல் ரோஸ்டாக் அருகே உள்ள பண்ணையில் H5N8 வகை பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பண்ணையில் சுமார் 4,500 கோழிகளைத் கொல்ல வேண்டியிருக்கும், ஆனால் பல இடங்கள் பண்ணை உள்ளதால், மொத்தம் 70,000-ஐ கோழிகளை கொல்லக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தார்.நோய் பரவலை எதிர்த்து போரா மற்றும் மேலும் பரவாமல் தடுக்க, கால்நடை மருத்துவ பார்வையில் இருந்து பார்க்கும் போது 70,000 கோழிகளை கொல்வது அவசியம். அதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் கூறினார்.

கடந்த வாரங்களில் ஐரோப்பாவில் தொடர்ச்சியான பறவை காய்ச்சல் பரவுவதாகக் கூறப்படுகிறது, இந்த நோய் காட்டு பறவைகளால் பரவுவதாக சந்தேகிக்கப்படுகிறது.Mecklenburg-Vorpommern-ல் உள்ள மற்றொரு ஜேர்மனி கோழி பண்ணையில் பறவைக் காய்ச்சல் காணப்பட்டதை அடுத்து சுமார் 16,100 வான்கோழிகள் கொல்லப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.