Hollandtamilan

தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றாலும் ஜேர்மனிக்கு வரலாம்

தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றாலும் ஜேர்மனிக்கு வரலாம்

மூன்றாவது நாடுகள் என்று அழைக்கப்படும் சில நாடுகளைச் சேர்ந்தவர்கள், தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை என்றாலும் ஜேர்மனிக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஜூன் 20 முதல், தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை என்றால் கூட சில நாட்டவர்கள் ஜேர்மனிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என ஜேர்மன் பெடரல் அரசு அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஆணையத்தின் பரிந்துரையின்பேரில், கொரோனா தொற்று ரீதியில் பாதுகாப்பானவை என கருதப்படும் நாடுகளைச் சேர்ந்தவர்களை நாட்டுக்குள் அனுமதிப்பது என ஜேர்மனி முடிவு செய்துள்ளது.அதைத் தொடர்ந்து ஜூன் 20, அதிகாலை 12 மணி முதல், சில மூன்றாம் நாடுகளைச் சேர்ந்த மக்கள், எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி ஜேர்மனிக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்பேனியா, அவுஸ்திரேலியா, இஸ்ரேல், ஜப்பான், லெபனான், நியூசிலாந்து, வட மாசிடோனியா குடியரசு, ருவாண்டா, செர்பியா, சிங்கப்பூர், தென் கொரியா, தாய்லாந்து, அமெரிக்கா. சீனர்களுக்கு மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி. வழங்கபட்டுள்ளது .

 

Schengen visa  பற்றிய மேலதிக தகவல்களை

Germany Permits Non-Vaccinated Americans, Albanians & More Third-Country Citizens to Enter for Tourism From Sunday