ஜேர்மன் பல்கலைக்கழகம் ஒன்றிலுள்ள தமிழ் துறை, நிதிப்பற்றாக்குறையால் மூடப்படும் அபாயத்திலுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜேர்மனியின் Cologne பல்கலைக்கழகத்தில், 1963ஆம் ஆண்டு Klaus-Ludwig Janert என்பவரால் துவக்கப்பட்ட தமிழ் துறையில், தற்போது 12 மாணவர்கள் பயில்கிறார்கள்…2018ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ஏற்பட்ட ஒரு நிதிப்பிரச்சினையில் இந்த பல்கலைக்கழகமும் சிக்கியது. அதன் தாக்கத்தால் இப்போது அந்த பல்கலைக்கழகத்தின் தமிழ் துறைக்கு நிதிப்பிரச்சினை ஏர்பட்டுள்ளது.
தமிழ் துறையின் தற்போதைய தலைவரான Ms. Ulrike Niklas என்பவர் 2022ஆம் ஆண்டு ஓய்வு பெற இருக்கிறார். அதன் பிறகு அவரது பொறுப்பை ஏற்றுக்கொள்ள யாரும் இதுவரை முன்வரவில்லை, அதற்கு முக்கிய காரணமும் நிதிப்பிரச்சினைதான் ..அந்த துறையில் ஒரு விரிவுரையாளர் மட்டும் இருக்கிறார், அவரது பெயர் Sven Wortmann. இந்த நிதிப்பிரச்சினையால், அவரும் தனது வேலையை இழக்கும் அபாயம் உள்ளது. 2005ஆம் ஆண்டு, இதேபோல் ஒரு பிரச்சினை ஏற்பட்டபோது, ஐரோப்பாவில் வாழும் தமிழர்களைக் கொண்ட ‘ஐரோப்பிய தமிழர்கள்’ என்ற அமைப்பு தமிழ் துறையைக் காப்பாற்ற நிதி சேகரிக்கும் முயற்சியில் இறங்கியது.அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளரான Abdul Jabbar கூறும்போது,
அப்போது Cologne பல்கலைக்கழகத்தில் தமிழ் துறை தலைவராக இருந்த பேராசிரியர் Janert என்பவர்தான் அந்த நேரத்தில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பித்துவந்த Ms..Nikolasஐ Cologne பல்கலைக்கழகத்தில் பொறுப்பேற்றுக்கொள்ள சம்மதிக்கவைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, மீண்டும் அதே ‘ஐரோப்பிய தமிழர்கள்’ அமைப்பு, Cologne பல்கலைக்கழகத்தின் தமிழ் துறையைக் காப்பாற்றுவதற்காக நிதி சேகரிக்கும் திட்டம் ஒன்றைத் துவக்கியுள்ளது…