ஜேர்மன் நாடாளுமன்றத்திற்கு முதல் முறையாக சிரிய அகதி ஒருவர் போட்டியிடுகிறார்.ஏழு ஆண்டுகளுக்குமுன் சிரியாவில் உள் நாட்டு யுத்தம் வெடித்தபோது அமைதிப் பேரணிகளில் பங்கேற்றதற்காக குறிவைக்கப்பட்ட 31 வயதான Tareq Alaows என்பவர் 2015ஆம் ஆண்டு சிரியாவிலிருந்து தப்பி ஜேர்மனியில் தஞ்சம் புகுந்தார்.இப்போது அவர் ஜேர்மன் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
Oberhausen என்ற நகரின் பிரதிநிதியாக பசுமைக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார் அவர்.செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி ஜேர்மனியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.ஜேர்மனிக்கு ஒரு அகதியாக வந்தபோது, அகதிகள் வாழும் நிலை கண்டு அதிர்ந்த அவர் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ஒரு பிரச்சாரத்தை முன் வைத்தார். இப்போதும் அகதிகளின் நலனுக்காக பாடுபடும் Tareq, அனைத்து அகதிகளின் குரலாக தான் இருக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.