Berlijn மற்றும் Frankfurt இல் நூற்றுக்கணக்கான மக்களும் München இல் குறைந்தபட்சம் 3000 பேரும் , Stuttgart இல் சுமார் 2000 பேரும் கொரோனா நடவடிக்கைகளுக்கு எதிராக சனிக்கிழமை வீதிகளில் இறங்கினார்கள்.
இதனால் காவல்துறையினர் அங்கு விரைந்தனர் . தலைநகர் Berlijn ல் குறைந்தது முப்பது பேர் கைது செய்யப்பட்டனர். அதிகபட்சமாக ஐம்பது பங்கேற்பாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். கலகக்காரர்களை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர காவல்துறையினர் மிளகு தெளிப்பைப் பயன்படுத்தினர்.
Munchen காவல்துறையினர் அதிகபட்சமாக 80 பேர் கலந்து கொள்ள அனுமதி வழங்கியிருந்தனர். ஆனால் அளவுக்கு அதிகமாக மக்கள் குவிந்ததை காவல்துறையினர் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி எச்சரித்தனர் .