ஜேர்மனியின் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுத்தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சியினர் வெற்றியைப் பெற்றனர்.2005 முதல் ஏஞ்சலா மெர்க்கலின் கீழ் 16 வருடங்கள் ஆட்சி செய்துவந்த பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் ஆட்சி இத்துடன் முடிவுக்கு வருகிறது.
மெர்க்கலின் CDU/CSU பழமைவாதக் கூட்டணிக்கு 24.5% வாக்குகள் கிடைத்து 194 இடங்களை கைப்பற்றிய நிலையில், மத்திய-இடது சமூக ஜனநாயகவாதிகள் கட்சி (SPD) 26.0% வாக்குகளைப் பெற்று 205 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.மேலும், பசுமை அரசியல் கட்சிகள் என்று சொல்லக்கூடிய Alliance 90/The Greens கூட்டணி காட்சிகள் 116 இடங்கள், FDP 91 இடங்கள், AFD 84 இடங்கள், The Left கட்சி 39 இடங்கள் மற்றும் இதர காட்சிகள் 1 இடத்தையம் கைப்பற்றின.
SDP கட்சி கடந்த 2017 பொதுத்தேர்தலில் போது, 20.5% வாக்குகளை மட்டுமே பெற்ற நிலையில், தற்போது கூடுதல் வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளது.தற்போது ஏதேனும் ஒரு கட்சி பெரும்பான்மையை பெற்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மற்ற கட்சிகளுடன் கூட்டணியை அமைக்கவேண்டும். கிறிஸ்துமஸ் விடுமுறைக்குள் கூட்டணிகள் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், Olaf Scholz ஜேர்மனியின் அடுத்த சான்செலராக பதவியேற்கவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியானால், SDP கட்சி சார்பாக பதவிர்க்கப்படும் நான்காவது சான்செலராக Scholz இருப்பார்.ஆனால், இதற்கிடையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மெர்க்கலின் CDU கட்சியின் தலைவர் Armin Laschet, “தேர்தலில் முதலிடத்தை பிடித்த கட்சியில் இருந்துதான் எப்போதும் சான்செலார் தேர்தெடுக்கப்படுவார் என்பது அல்ல, என்னை பொறுத்தவரை, ஒவ்வொரு கூட்டணி கட்சியும் சம்பந்தப்பட்ட, அனைவரும் வெளிப்படையாக காணக்கூடிய ஒரு அரசாங்கத்தை நான் விரும்புகிறேன் – வெறும் சான்செலர் மட்டும் பிரகாசிக்கக்கூடிய ஒரு அரசாங்கமாக இருக்கக்கூடாது” என்றார்.