Hollandtamilan

ஜேர்மனி பேரழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது: எச்சரிக்கும் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல்..

ஐரோப்பாவில் கொரோனா அதிகரித்துவரும் நிலையில், உள்ளூர் தலைவர்கள் தனது புதிய, கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்துள்ளதைத் தொடர்ந்து, ஜேர்மனி பேரழிவை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக ஏஞ்சலா மெர்க்கல் எச்சரித்துள்ளார், செக் குடியரசு, ஜேர்மனி, இத்தாலி, போலந்து, மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் அனைத்திலுமே  (வியாழக்கிழமை) புதிதாக கொரோனா தொற்றியவர்கள் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக பதிவானது.

ஜேர்மனியைப் பொருத்தவரை, உள்ளூர் தலைவர்கள், மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களில் இரவு 11 மணி ஊரடங்கு, ஒரு இடத்தில் 10 பேருக்கு மேல் கூட அனுமதியில்லை மற்றும் வெளியிடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் ஆகிய புதிய கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்ள முதலில் சம்மதம் தெரிவித்திருந்தார்கள்.ஆனால், பின்னர் ஏஞ்சலாவின் புதிய கட்டுப்பாடுகள் அடக்கிய திட்ட வரைவில் அவர்கள் கையெழுத்திட மறுக்கவே, ஏஞ்சலா கடுங்கோபம் அடைந்தார்.</p><p>நாம் என்னென்ன கட்டுப்பாடுகளை ஒப்புக்கொண்டோமோ அவையே ஒரு பேரழிவை தடுக்க போதுமானவை அல்ல என்றார் அவர்.ஜேர்மனியில், நேற்று மட்டுமே புதிதாக 6,638 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 33 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது