Hollandtamilan

ஜேர்மனியில் விரைவில் அமுலுக்கு வரும் கடுமையான கட்டுப்பாடுகள்

கொரோனாவின் 4வது அலையை எதிர்கொள்ள ஜேர்மனி போராடி வரும் நிலையில் நாட்டு மக்கள் விரைவில் கடுமையான கட்டுப்பாடுகளை சந்திக்க சத்தியம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், பதவி விலக போகும் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலும் அவருக்குப் பிறகு அதிபராக வரக்கூடிய Olaf Scholz-ம் பிராந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, புதிய திட்டங்களை வகுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர்கள் கட்டாய தடுப்பூசிகள் குறித்து விவாதிக்க உள்ளதாகவும், இந்த பேச்சுவார்த்தையில் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்த ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக, தடுப்பூசி போடாதவர்கள் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என கூறப்படுகிறது.

தொற்று விகிதங்களை குறைப்பது மற்றும் தொlர்ந்து அதிகரித்து வரும் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் மீதான அழுத்தத்தை குறைப்பதே ஜேர்மன் அரசின் நோக்கமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பார்கள் மற்றும் கிளப்களை மூடுவது மற்றும் பெரிய நிகழ்வுகளை கட்டுப்படுத்துவது ஆகியவை பரிசீலிக்கப்படும் நடவடிக்கைகளின் வரம்பில் அடங்கும்.ஜேர்மனியில் சில கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகள் ஏற்கனவே கிறிஸ்துமஸ் சந்தைகளை ரத்து செய்துள்ளன மற்றும் உணவகங்கள், ஜிம்கள் போன்ற பொது இடங்களுக்கு தடுப்பூசி போடாதவர்களை தடை செய்துள்ளன.

மேலதிக ஜெர்மனி செய்திகள்