நிறுவன தலைமைக் குழுவில் பெண்களை கட்டாயமாக நியமிக்க வேண்டும் என ஜேர்மனி சட்டம் இயற்றியுள்ளது.பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிறுவனங்கள் குறைந்தபட்சம் ஒரு பெண்ணையாவது கட்டாயமாக தங்கள் தலைமைக் குழுவில் நியமிக்க வேண்டும் என்ற சட்டத்திற்கு புதன்கிழமை ஜேர்மனியின் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.மூன்றுக்கும் மேற்பட்ட தலைமைக் குழு உறுப்பினர்கள் இருக்கும் நிறுவனங்களுக்கு இந்த சட்டம் பொருந்தும்.
மிகப் பெரிய தலைமைக் குழு உள்ள நிறுவனங்கள், ஒரே ஒரு பெண்ணையாவது தலைமைக் குழு உறுப்பினராக நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இந்த நடவடிக்கை நீண்டகாலமாக SPD கட்சியின் கோரிக்கையாக இருந்தது, ஆனால் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் மெர்க்கலின் கிறிஸ்தவ ஜனநாயக கட்சி இந்த நடவடிக்கையை நீண்டகாலமாக எதிர்த்தனர்.எவ்வாறாயினும், பெண் தலைவர்களை நியமிக்க நிறுவனங்கள் மிக மெதுவாக செயல்படுகின்றன என்று அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் பல முறை தனது அதிப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
பல பெண்கள் தலைமை பதவிக்கு வர இந்த சட்டம் ஒரு மைல்கல் என்று SPD குடும்ப அமைச்சர் Franziska Giffey ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.நாங்கள் பல ஆண்டுகளாக பார்த்து வருகிறோம், பல மாற்றங்கள் தானாக முன்வந்து செய்யப்படவில்லை, முன்னேற்றம் மிகவும் மெதுவாக உள்ளது என Franziska Giffey குறிப்பிட்டுள்ளார்.