ஜேர்மனியில் இதுவரை இல்லாத அளவுக்கு பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,188 பேர் பலியாகியுள்ளனர்.ஜேர்மனியின் Robert Koch நிறுவனத்தின் புள்ளிவிவரத்தின்படி, இதற்கு முன்பு டிசம்பர் 30ஆம் திகதி 1,129 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருந்தார்கள்.
நேற்றைய எண்ணிக்கை, அதையும் தாண்டி உயர்ந்து 1,188 ஆகிவிட்டது. ஆக, ஜேர்மனியில் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 40,401ஆகியுள்ளது. இதுவரை ஜேர்மனியில் 1,895,139 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.