Hollandtamilan

ஜேர்மனியில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்ட கொரோனா மரணம்!

ஜேர்மனியில் தினசரி பதிவாகும் கொரோனா பலி எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.ஜேர்மனியில் நேற்று  மட்டும் கொரோனாவால் 952 பேர் பலியாகியுள்ளனர்.இதுவரை கடந்த வெள்ளிக்கிழமை 598 மரணங்கள் பதிவானதே 24 மணிநேரத்தில் பதிவான அதிக இறப்புகள் எண்ணிக்கையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.தற்போது வரை ஜேர்மனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13,79,238 ஆக அதிரிகத்துள்ளது, பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 23,427 ஆக அதிகரித்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டு வர ஜேர்மனியில் இன்று (புதன்கிழமை) முதல் புதிய கடுமையான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.கடைகள், பள்ளிகள் மூடவது உள்ளிட்ட இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள புதிய ஊரடங்கு ஜனவரி 10ம் தேதி வரை தொடரும் என அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் அறிவித்தார்.கொரோனா வைரஸ் போக்கால் தான் கவலைப்படுவதாகவும், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் மிகவும் கடினமான மாதங்களாக இருக்கும் என்று அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் எம்.பி-க்களை எச்சரித்தார்.