Hollandtamilan

ஜேர்மனிக்கு கொடிய மாதமாக மாறிய டிசம்பர் மாதம்! அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்.

ஜேர்மனியில் கொரோனாவால் பாதிகப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை டிசம்பர் மாதத்தில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாகவும், இதை குறைக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸால், ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிகப்பட்டுள்ளன. இதில் ஜேர்மனி இந்த கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளையும், நடவடிக்கைளையும் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது ஜேர்மனிக்கு டிசம்பர் மாதம் கொரோனாவால் கொடிய மாதமாக இருந்துள்ளது. நவம்பர் மாதம் முதல் இதன் இறப்பு எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.டிசம்பர் 2 முதல் ஜனவரி 1 வரை சுமார் 16,718 பேர் கொரோனா வைரஸால் இறந்ததாகக் கூறப்படுகிறது என்று தொற்று நோய்களுக்கான ராபர்ட் கோச் நிறுவனம் (ஆர்.கே.ஐ) தெரிவித்துள்ளது.டிசம்பர் மாத எண்ணிக்கை நவம்பர் முதல் 6,155 இறப்புகள் பதிவு செய்யப்பட்டதாகவும், அதனுடன் ஒப்பிடும் போது, இது பெரிய எண்ணிக்கை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் இறப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை டிசம்பரில் பதிவாகியுள்ளன. நாட்டில் கொரோனாவால் இதுவரை மொத்தத்தில் 33,071 பேர் உயிரிழந்துள்ளனர்.ஜேர்மனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, டிசம்பரில் மட்டும் 675,188 பதிவாகியுள்ளது. மொத்தம் 17 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.