புதுவகை கொரோனா வைரஸ்கள் குறித்த அச்சம் காரணமாக, பயணக்கட்டுப்பாடுகளை கடுமையாக்கவும், விமானப்போக்குவரத்தை முற்றிலுமான நிறுத்தவும் ஜேர்மனி திட்டமிட்டு வருகிறது.அத்தியாவசியமற்ற அனைத்து வகை போக்குவரத்தையும் நிறுத்துவது தொடர்பாக பெடரல் அரசுடன் உள்துறை அமைச்சகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
திடீர்மாற்றம் பெற்ற பலவகை கொரோனா வைரஸ்கள் உருவாக்கியுள்ள அச்சம் காரணமாக கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள், ஜேர்மனிக்குள் வரும் விமான போக்குவரத்தை முற்றிலும் நிறுத்துவது முதலான திட்டங்கள் பேச்சுவார்த்தையில் அடக்கம் என்று கூறியுள்ளார் உள்துறை அமைச்சரான Horst Seehofer.
பயங்கரமாக பரவிவரும் கொரோனாவிலிருந்து தன்னாலியன்றவரை அரசு தங்களை பாதுகாக்கவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றார் அவர், இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய மட்டத்தில் திருப்திகரமான நடவடிக்கைகள் எடுக்கப்படாதபட்சத்தில், தேசிய அளவில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளது உள்துறை அமைச்சகம்.