Hollandtamilan

கொரோனா தடுப்பூசி போடும் பிரமாண்ட திட்டங்களை துவக்கியது ஜேர்மனி.

கொரோனா தடுப்பூசி போடும் பிரமாண்ட திட்டங்களை துவக்கிய ஜேர்மனி, 60 தடுப்பூசி மையங்களை அமைக்க தயாராகிவருகிறது. நவம்பர் 10ஆம் திகதிக்குள் கொரோனா தடுப்பூசி மையங்களை அமைப்பதற்கான இடங்களின் முகவரிகளை அளிக்குமாறு ஜேர்மன் சுகாதாரத்துறை 16 மாகாண அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது.


ஜேர்மன் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் நாடு முழுவதும் 60 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் தடுப்பூசி மருந்தை பாதுகாப்பாக சேமித்துவைப்பதற்காக அவற்றை – 78C வெப்பநிலையில் வைக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால், அதற்கான வசதி பல தடுப்பூசி மையங்களில் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், வீடியோ கான்பரன்ஸ் ஒன்றில் பேசிய பெடரல் சுகாதாரத்துரை அமைச்சரான Jens Spahn, இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.