Hollandtamilan

கொரோனா தடுப்பூசிகளை குப்பையில் வீசுகிறது ஜேர்மனி

சரியான திட்டமிடல் இல்லாததால்விலை மதிப்பற்றவையாக கருதப்படும் கொரோனா தடுப்பூசிகள் ஜேர்மனியில் குப்பையில் வீசப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார் ஜேர்மன் தலைவர் ஒருவர். சில நாடுகளில் தலைவர்கள் மே மாத்திற்குள் அனைத்துக் குடிமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுவிடுவதாக உறுதியளித்துள்ளார்கள். ஆனால், நம் நாட்டிலோ தடுப்பூசிகள் வீசியெறியப்பட்டு குப்பையில் கிடக்கின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார் FDP கட்சியின் தலைவரான Christian Lindner என்பவர்.இந்த குற்றச்சாட்டு உண்மையா? குப்பையில் வீசப்பட்ட தடுப்பூசி குறித்த விவரங்கள், ஜேர்மன் பெடரல் சுகாதாரத்துறை வசமோ, Robert Koch நிறுவனத்திடமோ இல்லை. ஆனால், மாகாணம் வாரியாக பத்திரிகை ஒன்று மேற்கொண்ட ஆய்வில் சில விவரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கொரோனா தடுப்பூசிகள் குப்பையில் வீசி எறியப்படுகின்றன என்னும் அந்த கூற்று முற்றிலும் தவறானது அல்ல. சிறிய எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் குப்பையில் வீசப்படத்தான் செய்கின்றன.அதே நேரத்தில் Lindner குற்றம் சாட்டியுள்ளது போலும் நிலைமை இல்லை. சில மாகாணங்கள் ஒரு டோஸ் தடுப்பூசி கூட வீணாகவில்லை என கூறியுள்ள நிலையில், வேறு சில மாகாணங்களில், பயணத்தின்போதும், குளிர்பதனப் பெட்டிகளில் பாதுகாத்து வைக்கப்படும்போதும், சில நேரங்களில் கெட்டுப்போகும் தடுப்பூசிகளை வீசியெறியத்தான் வேண்டியுள்ளது என தெரியவந்துள்ளது.ஆகவே, பெரும் எண்ணிக்கையிலான தடுப்பூசி வீணாக்கப்படுவதாக Lindner கூறியுள்ள குற்றச்சாட்டில் முழு உண்மையில்லை என தெரியவந்துள்ளது.